உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்ற சுவிட்ஸர்லாந்து பயணமானார் பிரதமர்

உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்ற சுவிட்ஸர்லாந்து பயணமானார் பிரதமர்

உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்ற சுவிட்ஸர்லாந்து பயணமானார் பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

19 Jan, 2016 | 9:09 pm

உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சுவிட்ஸர்லாந்து நோக்கிப் பயணமானார்.

உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என பிரதமர் அலுவலகம் நேற்று (18) விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்முறை உலக பொருளாதா மாநாடு சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை (20) ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை மீது திருப்புவதற்கு இம்முறை மாநாடு உதவியாக அமையுமென பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தின் புதிய பிரவேசங்கள் குறித்து ஆழமாக ஆராயப்படவுள்ள இம்முறை, உலக பொருளாதார மாநாட்டில் 40 க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்