உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: விரைவில் புதிய விலை சூத்திரம் அறிமுகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: விரைவில் புதிய விலை சூத்திரம் அறிமுகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: விரைவில் புதிய விலை சூத்திரம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2016 | 9:03 am

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள சந்தரப்பத்தில் அதன் நன்மையினை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைவில் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரானுக்கு எதிரான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டதும் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சர்வதேச மசகு எண்ணெய் சந்தைக்கு பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஈரானுக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பு கிட்டியதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

2013 ஆண்டிற்கு பின்னர் உலக சந்தையில் மசகு எண்ணெயின் ஆகக்குறைந்த விலை நேற்று பதிவானது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்