தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவற்கு சமயத் தலைவர்களின் ஒத்துழைப்பு அவசியம் – ஜனாதிபதி

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவற்கு சமயத் தலைவர்களின் ஒத்துழைப்பு அவசியம் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2016 | 7:57 pm

நாட்டு மக்கள் மத்தியில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை சட்டத்தினால் மாத்திரம் நிறைவேற்ற முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற பைவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

களுத்துறை இந்துக் கல்லூரியில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவும் இதில் பங்கேற்றிருந்தார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுவதற்கு சமயம் மற்றும் கலாசாரத்தை கருவியாக பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்