தெமட்டகொட விபத்தில் மரணித்த பெண், சிறுமியின் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது

தெமட்டகொட விபத்தில் மரணித்த பெண், சிறுமியின் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது

தெமட்டகொட விபத்தில் மரணித்த பெண், சிறுமியின் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2016 | 12:53 pm

தெமட்டகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த பெண் மற்றும் சிறுமியின் சடலம் நேற்றிரவு வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பேஸ்லைன் வீதியின் ரயில் கடவைக்கு அருகிலுள்ள மஞ்சள் கடவையினைக் கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் 47 வயது பெண் மற்றும் 10 வயது சிறுமி ஆகியோர் நேற்று முன்னதினம் இரவு உயிரிழந்தனர்.

விபத்துடன் தொடர்புடைய காரினை 15 சிறுவன் செலுத்தி சென்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான 15 வயது சிறுவன் மற்றும் அவனது தாயார் ஆகியோர் நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சந்தேகநபரான பெண்ணை ஜனவரி 25 ஆம் திகதிவரையும், சிறுனை ஜனவரி 29 ஆம் திகதி வரையும் விளக்கமறிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்