96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது

96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது

96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2016 | 8:54 am

சட்டவிரோதமாக ஒருதொகை வல்லப்பட்டையை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 23 கிலோகிராம் 400 கிராம் நிறையுடைய வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டதாகவும், இதன் பெறுமதி 96 இலட்சம் ரூபாவெனவும் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து அபுதாபிக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதே நேற்று (16) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டள்ளார்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்