ஹப்புத்தளையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுப்பு

ஹப்புத்தளையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுப்பு

ஹப்புத்தளையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2016 | 10:16 am

தியத்தலாவ – ஹப்புத்தளை பகுதியிலுள்ள ஒஹிய நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்போன நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நண்பர்கள் நால்வருடன் நேற்று (16) பிற்பகல் குளிக்கச் சென்ற போதே, 25 வயதுடைய இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரும் பிரதேச வாசிகளும் இணைந்து ​தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரண சடங்கொன்றில் கலந்து கொண்ட இளைஞனே நீராடச் சென்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்