எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு மீண்டும் இடமாற்றம்

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு மீண்டும் இடமாற்றம்

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு மீண்டும் இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2016 | 4:30 pm

எம்பிலிப்பிட்டியவில் ஏற்பட்ட மோதலில் இளைஞரொருவர் உயிரழந்த சம்பவத்திற்கு பின்னர் அவிசாவளை பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் தலைமையகத்திற்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக 4 உதவிப் பொலிஸ் அத்தியகட்சர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பிரதான பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ.ஏ.சோமரத்ன எம்பிப்லிபிட்டிய பொலிஸ் நிலையத்தின் பரிசோதகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேவை அவசியம் நிமித்தம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்