ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச வர்த்தக தடைகள் நீக்கப்பட்டன

ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச வர்த்தக தடைகள் நீக்கப்பட்டன

ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச வர்த்தக தடைகள் நீக்கப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2016 | 3:35 pm

ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச வர்த்தகத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. அணு ஆயுத நடவடிக்கைகளைத் தவிர்ப்பது தொடர்பான ஒப்பந்தத்திற்க ஈரான் இணக்கம் தெரிவித்ததையடுத்து, வர்த்தகத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஈரான் இணக்கம் தெரிவித்துள்ள புதிய ஒப்பந்தமானது, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் சமாதானம் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்த உதவுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் உலக வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையில் எட்டப்பட்ட இந்த இணக்கப்பாட்டை அடுத்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் தளர்த்தப்படவுள்ளதோடு, ஈரானின் சர்வதேச எண்ணெய் வர்த்தக நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்