மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது

மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது

மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 4:01 pm

தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மகன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய 40 வயது மதிக்கத்தக்க மகன், கையில் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிய முறுகல் நிலை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 65 வயதான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்