பாணின் விலை 1 ரூபாவால் குறைப்பு

பாணின் விலை 1 ரூபாவால் குறைப்பு

பாணின் விலை 1 ரூபாவால் குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 11:20 am

ஒரு இறாத்தல் பாணின் விலையை நேற்று (15) நள்ளிரவு முதல் 1 ரூபாவினால் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம், 55 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலை, நள்ளிரவு முதல் 54 ரூபாவாகக் குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டார்.

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அவற்றின் விலைகளைக் குறைக்குமாறும் பேக்கரி உரிமையாளர்களிடம், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேச நிர்மாண வரி 2 வீதத்திலிருந்து 4 வீதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து, பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, பாணின் விலையை 1 ரூபாவினால் உயர்த்துவதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்தது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தேச நிர்மாண வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, நேற்று கூடிய அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருப்பின், அவற்றின் விலைகளையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்