பர்கினா ஃபசோவில் அல்கய்தா தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி

பர்கினா ஃபசோவில் அல்கய்தா தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி

பர்கினா ஃபசோவில் அல்கய்தா தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 12:51 pm

மேற்கு ஆப்பிரிக்காவின் பர்கினா ஃபசோ (Burkina Faso) நாட்டின் தலைநகரான குவாகாடோகா நகரில் நேற்று (15) அல்கய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் பிடியிலிருந்து இதுவரை 63 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.

பர்கினோ ஃபசோ, மேற்கு ஆப்பிரிக்காவில் சுற்றிலும் நிலப்பிரதேசத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அதனைச் சுற்றி மாலி, நைகர், பெனின் உட்பட ஆறு நாடுகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று குவாகாடோகா நகருக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்குள்ள ஸ்பெலெண்டிட் ஹோட்டலுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தீவிரவாதிகள் ஹோட்டலுக்கு வெளியே நின்ற 10 வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

பர்கினா ஃபசோ இராணுவத்துடன், பிரான்ஸ் படையினரும் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், அந்த ஹோட்டலில் இருந்த 63 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரீமிஸ் தாந்த்ஜிநோ கூறினார். அதில் 33 பேர் காயங்களுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்