கொழும்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கும் அமர்வு

கொழும்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கும் அமர்வு

கொழும்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கும் அமர்வு

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 3:35 pm

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கான மக்கள் கருத்துக்களைக் கேட்டறியும் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துக்களை வினவும் அமர்வை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடத்தவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குறிப்பிட்டார்.

கொழும்பு 02 இல், ஸ்டேப்பள் வீதியின் விசும்பாயவில் அமைந்துள்ள செயலகத்தில் மக்களுக்கான அமர்வு நடத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அமர்வின்போது அரசியலமைப்புத் திருத்தத்திற்கான தங்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 0112 43 76 76 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அல்லது 0112 32 87 80 என்ற பெக்ஸ் இலக்கத்தின் ஊடாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துகளைக் கேட்டறியும் குழுவுடன் தொடர்புகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்