கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் 

கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் 

கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் 

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 12:13 pm

கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான விராஜ் ரெஸ்லின் அப்புஹாமியின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முந்தல், சின்னப்பாடு – கொத்தாந்தீவு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது இன்று அதிகாலை கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைக்குண்டுத் தாக்குதலில் வீட்டிற்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இதுகுறித்து முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி விராஜ் ரெக்ஸின் அப்புஹாமி 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கல்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினராக பதவிவகித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]st.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்