ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை பிக்காபோ ஸ்ட்ரீட் கைது

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை பிக்காபோ ஸ்ட்ரீட் கைது

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை பிக்காபோ ஸ்ட்ரீட் கைது

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 1:54 pm

தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் வீராங்கனை பிக்காபோ ஸ்ட்ரீட், தனது தந்தையைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பனிச்சறுக்கு போட்டியில் பல சாதனைகளை நிலைநாட்டிய வீராங்கனை பிக்காபோ ஸ்ட்ரீட்.

1990 களில் சர்வதேச அளவில் உலகின் தலைசிறந்த வீராங்கனையாகப் பதிவாகிய பிக்காபோ ஸ்ட்ரீட் அமெரிக்கா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் சுவீகரித்தவர்.

கடந்த மாதம் தனது 76 வயதான தந்தையை படிக்கட்டிலிருந்து தள்ளிவிட்டதுடன் தாக்குதலுக்கு உட்பட்டு கீழ்த்தளத்தில் விழுந்த தந்தையைத் தாக்கியதாகவும் ஸ்ட்ரீட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 44 வயதான முன்னாள் ஒலிம்பிக் நட்சத்திரத்தின் மூன்று பிள்ளைகளும் சாட்சியமளித்துள்ளனர்.

உதாவில் அமையப் பெற்றுள்ள இல்லத்தில் வைத்து ஸ்ட்ரீட் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஸ்ட்ரீட்டின் தந்தை வழக்கில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்