எம்பிலிப்பிட்டிய இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 2:23 pm

எம்பிலிப்பிட்டியவில் விருந்துபசார வைபவமொன்றின்போது ஏறபட்ட மோதலில் உயிரிழந்த சுமித் பிரசன்ன ஜயவர்தனவின் மரணம் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ்மா அதிபரினால் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்