இரத்தினபுரி வர்த்தகரைக் காணவில்லை 

இரத்தினபுரி வர்த்தகரைக் காணவில்லை 

இரத்தினபுரி வர்த்தகரைக் காணவில்லை 

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 12:28 pm

இரத்தினபுரி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் காணாமற்போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமற்போன வர்த்தகரின் மனைவியால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான வர்த்தகர் கடந்த 13 ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தமது தந்தை காணாமற்போனமை சந்தேகத்திற்குரியது என  வர்த்தகரின் மகன் தெரிவித்துள்ளார்.

ஆயினும், காணாமற்போன வர்த்தகர் தொடர்பில் இதுவரை எந்த விதமான தகவல்களும் தெரியவரவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்