இரணைமடு குளத்தின் 96 ஆண்டு பூர்த்தி: 96 பானைகளில் பொங்கலிட்ட மக்கள்

இரணைமடு குளத்தின் 96 ஆண்டு பூர்த்தி: 96 பானைகளில் பொங்கலிட்ட மக்கள்

இரணைமடு குளத்தின் 96 ஆண்டு பூர்த்தி: 96 பானைகளில் பொங்கலிட்ட மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 5:52 pm

இரணைமடு விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இர​ணைமடு பொங்கல் விழா இன்று கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

இரணைமடு குளத்தின் 96 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 96 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரட்ணம் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இர​​ணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர், மு.சிவமோகன் இந்நிகழ்வில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]எதிர்வரும் காலத்தில் இந்தக் குளத்தின் அபிவிருத்திக்காக இதனைத் திறந்துவிட வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த வேளையில், எங்கள் மக்களின் பொருளாதாரப் பாதிப்பு என்பது உண்மையில் மிகவும் தாக்கமான நேரம். நாங்கள் எல்லோரும் கடனாளிகளாகவும், சொத்துக்களை இழந்தவர்களாகவும் இருக்கின்ற வேளையில், இந்தக் குளத்து நீரை திறந்து விட முடிவு எடுத்துள்ளோம். இவ்வருடம் இரணைமடு மூலம் எதுவித பயன்பெறும் வருமானங்களையும் ஈட்ட முடியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம். இருப்பினும், நாங்கள் அந்த இழப்புக்களை, கஷ்டங்களைத் தாங்கி குளத்தை அபிவிருத்தி செய்வதற்காக அவ்வாறான முடிவினையும் உடன்பாட்டடையும் எட்டியுள்ளோம்.[/quote]

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]கிளிநொச்சி மாவட்டத்தையும் யாழ். மாவட்டத்தையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கின்றனர் சிலர். தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்கின்ற அளவிற்கு கிளிநொச்சி மக்கள் பன்பு தெரியாதவர்கள் இல்லை… முதல் தடவையாக இந்தத் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொன்ன போது என்னுடைய ஆட்சேபனையைத் தெரிவிக்கின்றேன், என்று தெரிவித்திருந்தேன். எங்களுக்குக் குடிக்கப் போதாது, கமம் செய்யப் போதாது, உங்களுக்குக் குடிக்க மட்டும் தரலாம், ஒரு குறித்த பகுதி மாத்திரம். பளை வரைக்கும் அல்லது பூநகரி வரைக்கும் சிறு ஊருக்கு மாத்திரம் என்றால் பிரச்சினை இல்லை. முழு யாழ்ப்பாணத்திற்கும் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தைத் தான் உருவாக்கினார்கள். [/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்