பாணின் விலை மீள குறைப்பு

பாணின் விலை மீள குறைப்பு

பாணின் விலை மீள குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2016 | 11:41 am

ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

தேச நிர்மாண வரி 2 வீதத்திலிருந்து 4 வீதம் வரை அதிகரிக்கப்பட்டமையினால் அனைத்து பேக்கரி உற்பத்திகளின் செலவும் அதிகரித்திருந்ததாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்

இதனடிப்படையில் பாண் இறாத்தலொன்றின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் மீண்டும் தேச நிர்மாண வரி குறைக்கப்பட்டமையினால் அதன் நன்மையை மக்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக ஜயவர்த்தன கூறினார்.

பாண்களின் விலைக் குறைப்பு தொடர்பாக தீர்மானிப்பதற்கான கூட்டமொன்றை இன்று நடத்தவுள்ளதாக அகில இலங்கை உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிடுகின்றது.

அத்துடன் விலைக் குறைப்பு தொடர்பில் இன்று மாலை இடம்பெறவிருக்கும் ஊடக சந்திப்பில் அறிவிக்கவுள்ளதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்