பெறுமதி சேர் வரியில் மாற்றமில்லை

பெறுமதி சேர் வரியில் மாற்றமில்லை

பெறுமதி சேர் வரியில் மாற்றமில்லை

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2016 | 12:02 pm

இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் தேசிய கட்டிட வரி மற்றும் பெறுமதி சேர் வரித்திட்டத்தை தற்காலிமாக நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து பழைய வரி நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச நிதிக் கொள்கை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வட் எனப்படும் பெறுமதி சேர் வரி 11 வீதமாக காணப்படும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய கட்டிட வரி 2 வீதமாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தேசிய கட்டிட வரி 2 முதல் 4 வீதம் வரை அதிகரிக்கப்பட்டது.

மேலும் பெறுமதி சேர் வரி 11 வீதத்திலிருந்து 8 வீதம் வரை குறைக்கப்பட்டிருந்தது.

வரவு செலவுத்திட்டத்தினூடாக நிறைவேற்றப்பட்ட போதிலும் புதிய வரி திருத்தத்தை நடைமுறைபடுத்துவதற்கு பாராளுமன்றத்தின் சட்டத்தினூடாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவையுள்ளதாக அரச நிதி கொள்கை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் 90,000 மில்லியன் ரூபா வரி வருமானம் பெறப்படும் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பெருமதிசேர் வரி குறைப்பின் மூலம் சுமார் 25,000 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தேசிய கட்டிட வரி மற்றும் பெறுமதி சேர் வரித்திட்டம் தொடர்பிலான புதிய தீர்மானம எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரச நிதி கொள்கை திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்