எம்பிலிப்பிட்டிய இளைஞர் உயிரிழப்பு: விசாரணை அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்பிப்பு

எம்பிலிப்பிட்டிய இளைஞர் உயிரிழப்பு: விசாரணை அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்பிப்பு

எம்பிலிப்பிட்டிய இளைஞர் உயிரிழப்பு: விசாரணை அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2016 | 9:37 am

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கை இன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையை இன்றைய தினம் சமர்பிக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோன் தெரிவித்திருந்ததாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.

இந்த விசாரணை அறிக்கையை, நாளை நடைபெறவுள்ள ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பித்து, கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்