இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை ஒரு ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை ஒரு ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை ஒரு ரூபாவால் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2016 | 7:33 am

இன்று (13) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை ஒரு ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சங்கத்தினர் நேற்று (12) பிற்பகல் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறினார்.

பாணின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவியிருந்த நிலையில் சங்கத்தின் அங்கத்தவர்கள் கூடி அதுகுறித்து ஆராய்ந்ததாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

பேக்கரி உற்பத்திகளுக்கான மா, சீனி உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகளில் அதிகரித்துள்ள நிலையில் பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் ஒரு ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம் தற்போது 54 ரூபாவுக்கு விற்கப்படும் ஒரு இறாத்தல் பாணின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்