விஜய்யுடன் கைகோர்க்கும் மியா ஜோர்ஜ்

விஜய்யுடன் கைகோர்க்கும் மியா ஜோர்ஜ்

விஜய்யுடன் கைகோர்க்கும் மியா ஜோர்ஜ்

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2016 | 9:57 am

விஜய் தற்போது தனது 59 ஆவது படமாக அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தனது 60 ஆவது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை சமீபகாலமாக நடந்து வந்தது. இப்படத்தில் காஜல் அகர்வால் ஹிரோயினாக நடிக்கவிருப்பதாகவும், இதற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது, ‘அமரகாவியம்’, விஷ்ணு நடிப்பில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் நடித்த மியா ஜோர்ஜ், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ‘காக்காமுட்டை’ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரதன் ஏற்கெனவே விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ்மகன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்