3 ஆண்டுகளின் பின்னர் கூடிய எகிப்து பாராளுமன்றம்

3 ஆண்டுகளின் பின்னர் கூடிய எகிப்து பாராளுமன்றம்

3 ஆண்டுகளின் பின்னர் கூடிய எகிப்து பாராளுமன்றம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 6:41 am

எகிப்து நாட்டில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நேற்றைய தினம் அந்நாட்டின் பாராளுமன்றம் கூடி உள்ளது.

பொதுமக்கள் புரட்சியை அடுத்து எகிப்து நாட்டில் ஹொஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால ஆட்சி 2011 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து முகமது மோர்சி, தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி ஆனார். ஆனால் அவரது ஆட்சியும் அங்கு நிலைக்கவில்லை.

2013 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தளபதி அப்துல் பட்டா எல் சிசி ஜனாதிபதியானார். இதனையடுத்து அந்த நாட்டின் பாராளுமன்றத்தை கலைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இப்போது புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி எல் சிசிக்கு ஆதரவான கூட்டணி அதிக இடங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 596 உறுப்பினர்களை கொண்ட எகிப்து நாட்டின் பாராளுமன்றம் நேற்று முதல் முறையாக கூடி உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்