வித்தியா ​கொலைச் சந்தேகநபர்களில் மூவரை கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்க உத்தரவு

வித்தியா ​கொலைச் சந்தேகநபர்களில் மூவரை கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்க உத்தரவு

வித்தியா ​கொலைச் சந்தேகநபர்களில் மூவரை கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்க உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 12:40 pm

யாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேநபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூன்று சந்தேகநபர்களை கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய சந்தேகநபர்களை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்குமாறும் நீதவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.

யாழ் புங்குடுதீவில் கூட்டு பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 13 ஆம் திகதி மாணவி வித்தியா சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மாணவி வித்தியாவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படடமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்