மெக்சிகோவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலி

மெக்சிகோவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலி

மெக்சிகோவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 6:32 am

மெக்சிகோ நாட்டின் வெராக்ருஸ் மாநிலத்தில் உள்ள அடோயக் நகராட்சியில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர். நேற்று நடந்த இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின் படி, சாரதியின் அதிக வேகத்தால் காட்டுப்பாட்டை இழந்தே பேருந்து அடோயக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், குழந்தைகள் உட்பட உள்ளூர் போட்டிக்குச் செல்லும் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை அந்த பேருந்து ஏற்றிச் சென்றதும் தெரிய வந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்