மஹேல ஜயவர்த்தன பிக் பாஷ் லீக்கில் தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்

மஹேல ஜயவர்த்தன பிக் பாஷ் லீக்கில் தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்

மஹேல ஜயவர்த்தன பிக் பாஷ் லீக்கில் தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 1:37 pm

பிக் பாஷ் லீக்கில் சிறப்பாக விளையாடி வரும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்த்தன இனிவரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் விளையாடி வரும் அடிலெய்ட் ஸ்டைரக்கர்ஸ் அணி முகாமைத்துவம் இதனை உறுதி செய்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி பிரிஸ்பேன் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் பொது ஓட்டமொன்றை பெற முயற்சித்த போது இவர் உபாதைக்குள்ளாகியிருந்தார்.

எனினும் அந்த போட்டியில் 36 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

எனினும் இனிவரும் போட்டிகளில் அவர் கலந்து கொள்வது கேள்விக்குறியே. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 2 அரைச்சதங்களை மஹேல விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்