மத்தள விமானநிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லினை அகற்ற தீர்மானம்

மத்தள விமானநிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லினை அகற்ற தீர்மானம்

மத்தள விமானநிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லினை அகற்ற தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 6:18 am

மத்தள விமானநிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லினை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நெல்லினை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கு காணப்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக விமானநிலைய அதிகாரிகளினதும், சுங்கத்திணைக்களத்தினதும் அனுமதியின்றி நெல்லை களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் விமான நிலைய அதிகரிகளுக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழிக்கிணங்க அதற்காக செலுத்த வேண்டிய நிதியினை செலுத்தவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹரிசன் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நெல்லினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தில் நெற் களஞ்சியப்படுத்துவதற்கான எதிர்பார்ப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.

மத்தள விமான நிலையத்தில் அகற்றப்படும் நெல்லினை தனியார் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்