காலி முகத்திடல் கடலில் மூழ்கி காணாமற்போன மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

காலி முகத்திடல் கடலில் மூழ்கி காணாமற்போன மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

காலி முகத்திடல் கடலில் மூழ்கி காணாமற்போன மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 7:31 pm

கொழும்பு, காலி முகத்திடல் கடலில் மூழ்கி காணாமற்போன மாணவனை தேடும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் இன்று மாலை வரை மாணவன் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த மொஹமட் அர்ஷாத் என்ற 16 வயது மாணவனே கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.

நண்பர்கள் சிலருடன் விளையாடுவதற்காக மாணவன் நேற்று மாலை காலி முகத்திடலுக்கு சென்றதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

நேற்றிரவு குறித்த மாணவனின் அயலவர்கள் சிலர் காலி முகத்திடலுக்கு சென்று காணாமற்போன மாணவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது கற்பாறைமீது தவறிவிழுந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய ஒருவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காலி முகத்திடலை அண்மித்த கடற்பரப்பு தற்போது கொந்தளிப்பாக காணப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்