காலிமுகத்திடலில் குளிக்கச் சென்று காணாமற்போனவரைத் தேடிச்சென்றவர் உயிரிழப்பு

காலிமுகத்திடலில் குளிக்கச் சென்று காணாமற்போனவரைத் தேடிச்சென்றவர் உயிரிழப்பு

காலிமுகத்திடலில் குளிக்கச் சென்று காணாமற்போனவரைத் தேடிச்சென்றவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 11:37 am

கொழும்பு மற்றும் அம்பலாந்தோட்டை பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமற் போயுள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடல் கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் ஒருவர் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவரே காணாமற் போயுள்ளார்.

காணாமற் போனவரை தேடுவதற்காக சென்ற ஒருவர், தவறி கடலில் வீழ்ந்ததை அடுத்து கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அம்பலந்தொட்டை – பஹலகம பகுதியில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்