உலகின் அனைத்து நாடுகளுக்கும் இலங்கை நட்புக்கரம் நீட்டியுள்ளது – ஜனாதிபதி

உலகின் அனைத்து நாடுகளுக்கும் இலங்கை நட்புக்கரம் நீட்டியுள்ளது – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 6:43 pm

நடுநிலமையான வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றும் இலங்கை உலகின் அனைத்து நாடுகளுக்கும் நட்புக்கரம் நீட்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் 7 பேர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதியிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

வெளியுறவுத்துறை கொள்கையில் இலங்கையின் நடுநிலைத் தன்மை குறித்து ஜனாதிபதி இதன் போது இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியதுடன்,உலகின் அனைத்து நாடுகளுக்கும் இலங்கை நட்புக் கரம் நீட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிலி,செக்குடியரசு,டென்மார்க்,குவாதமாலா,ஐவரிகோஸ்ட்,கம்போடியா,மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் சைப்ரஸின் உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழை கையளித்தனர்.

இலங்கைக்கு எதிரான நாடு என எந்த நாடும் தற்போது இல்லையென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்