வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அறிக்கை தயாரிப்பு பணிகள் நிறைவு

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அறிக்கை தயாரிப்பு பணிகள் நிறைவு

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அறிக்கை தயாரிப்பு பணிகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2016 | 10:44 am

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைவான யோசனைகள் அடங்கிய அறிக்கையினை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அதனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பிரதமரிடம் கையளிக்கவுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் தேசிய கொள்கைத்திட்டமிடல் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறினார்.

அரச முகாமைத்துவம்,நிதி,கல்வி,மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்தக் குழு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்கள் மாத்திரமன்றி தனியார் மற்றும் சுய தொழில் முயற்சிகளில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டார்.

அத்துடன் இவற்றை குறுகிய கால தீர்வாகவே முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வருடாந்தம் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கான நீண்டகால வேலைத்திட்டமொன்றை முன்வைக்கவும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் 30,000 பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தம்மிக முனசிங்க கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்