போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது

போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது

போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2016 | 10:27 am

போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட 2 சந்தேகநபர்கள் நீர்கொழும்பு மரவள்ளிச் சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து அதிக விலையுடைய போதையூட்டும் 236 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒரு மாத்திரையினை 3,000 ரூபா முதல் 4,000 ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இந்த மாத்திரைகளை இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்கு வருபவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்