பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2016 | 9:51 am

சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிறுவனங்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தல் சபையின் செயலாளர் வைத்தியர் காந்தி ஆரியரத்ன கூறினார்.

பதிவு செய்யப்படாத வைத்திய நிறுவனங்களினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரசில் பதிவு செய்யப்படாத தனியார் வைத்திய நிறுவனங்களில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டாமென தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தல் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்