சிங்கராஜவன எல்லைப் பகுதி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை இந்த வருடத்திற்குள் நிறைவு

சிங்கராஜவன எல்லைப் பகுதி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை இந்த வருடத்திற்குள் நிறைவு

சிங்கராஜவன எல்லைப் பகுதி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை இந்த வருடத்திற்குள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2016 | 8:49 am

சிங்கராஜ வனத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் சிங்கராஜா வனத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 1000 ஹெக்டயரை அண்மித்த காணிகளை வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அநுர சதுருசிங்ஹ கூறினார்.

இதில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிங்கராஜா வனத்தை அண்மித்த கலவான பிரதேச செயலகப் பிரிவின் பல பகுதிகளில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையினை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கராஜா வனத்தில் காடழிப்பு தொடர்பில் நியூஸ்பெஸ்ட், அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது

கையகப்படுத்தப்படவுள்ள காணிகளுக்கு காணி வரியினை செலுத்த வேண்டாமென காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு ஆலோசணை வழங்கியுள்ளதாக அனுர சதுருசிங்க கூறினார்

எவ்வாறாயினும் சிங்கராஜ வனத்தின் எல்லைப் பகுதியில் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள காணிகளில் காடழிப்பு இடம் பெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராயுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்