கடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

கடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

கடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2016 | 4:45 pm

கடவத்தை கோனஹேன பெரிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை 9.35 மணி அளவில் வாகனமொன்றில் வந்த குழுவினர் இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் கூரிய ஆயுதத்தாலும் தாக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடும் காயங்களுக்குள்ளாக இருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோனஹேன வேபட பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்