உடற்பயிற்சி DVD ஐ பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது ஆபத்தானது – ஆய்வில் தகவல்

உடற்பயிற்சி DVD ஐ பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது ஆபத்தானது – ஆய்வில் தகவல்

உடற்பயிற்சி DVD ஐ பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது ஆபத்தானது – ஆய்வில் தகவல்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2016 | 4:15 pm

அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் உடற்பயிற்சி DVDகள் பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது தீங்கு விளைவிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் பிராட் கார்டினல் இது குறித்து கூறியதாவது “ உடற்பயிற்சி DVDகளில் அதிக கவர்ச்சியாக, நம்பமுடியாத மனித படங்கள் காட்டப்படுகின்றன. அதை பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்பவர்கள் அந்த கற்பனையான உருவங்களை நம்பும்படி தூண்டவும், வற்புறுத்தவும் படுகிறார்கள்.

இது உடற்பயிற்சி செய்பவர்களை மனதளவில் பாதிப்பது எங்கள் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.”

உலகம் முழுவது பரவியுள்ள உடற்பயிற்சி DVD சந்தையானது சுமார் 250 மில்லியன் டொலர் மதிப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்