அமீர் இயக்கத்தில் நடிக்கும் ராணா?

அமீர் இயக்கத்தில் நடிக்கும் ராணா?

அமீர் இயக்கத்தில் நடிக்கும் ராணா?

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2016 | 4:38 pm

அமீர் இயக்கும் புதிய படத்தில் ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

‘மௌனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ஆகிய படங்களை இயக்கிய அமீர் ‘யோகி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அதற்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் ‘ஆதிபகவன்’ திரைப்படத்தை இயக்கினார். அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

சமீபத்தில் வி.இசட். துரை இயக்கவிருக்கும் புதிய படத்தில் அமீர் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்நிலையில், நடிப்பதோடு மட்டுமல்லாமல், அமீர் ஒரு புதிய படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார். ‘பாகுபலி’ படத்தில் ராணாவின் நடிப்பு சிறப்பாக பேசப்பட்டதால், ராணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்