ஹிருணிக்கா பிரேமசந்திர கைது

ஹிருணிக்கா பிரேமசந்திர கைது

ஹிருணிக்கா பிரேமசந்திர கைது

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 10:24 am

தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர இன்று (09) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹிருணிக்கா இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

நீதிபதியின் ஆலோசனையுடனேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைதுசெய்யப்பட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்