ஹரிபொட்டர் கற்பனைப் பாத்திரம் உயிர்வாழ்கிறதா: குழப்பத்தை ஏற்படுத்திய போக்குவரத்து கெமரா (Video)

ஹரிபொட்டர் கற்பனைப் பாத்திரம் உயிர்வாழ்கிறதா: குழப்பத்தை ஏற்படுத்திய போக்குவரத்து கெமரா (Video)

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2016 | 5:15 pm

கனடாவில் பனிப்பொழிவுகள் ஆரம்பித்துள்ள நிலையில், நடுவானில் விமானம் பறப்பது போன்று பனி ஆந்தை ஒன்று பறப்பது மொன்றியலின் போக்குவரத்து கமெராவில் பதிவாகியுள்ளது.

பனிபோன்ற வெண்ணிற இறகுகளைக் கொண்ட இந்த ஆந்தை பனிமிகுந்த பகுதிகளில் வாழும் ஒரு வகை இனமாகும்.

இவற்றை ஆர்டிக் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காண்பது அரிதாகும். இவற்றை வெண் பேராந்தை எனவும் அழைக்கலாம்.

இந்த ஆந்தையைப் பார்த்த ஹரிபொட்டர் ரசிகர்கள் பலரும் அதில் வரும் ”ஹெட்விக்” உயிர்வாழ்வதாக நம்புவதாக  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்