மொனராகலையில் லொத்தர் சீட்டு விநியோகத்தர் காணாமற்போனமை தொடர்பில் விசாரணை

மொனராகலையில் லொத்தர் சீட்டு விநியோகத்தர் காணாமற்போனமை தொடர்பில் விசாரணை

மொனராகலையில் லொத்தர் சீட்டு விநியோகத்தர் காணாமற்போனமை தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 8:34 am

மொனராகலை பகுதியில் லொத்தர் சீட்டு விநியோகத்தர் காணாமற் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்டடுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபரின் மனைவியால் கடந்த 4 ஆம் திகதி பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டை அடுத்தே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

விநியோகத்தர் காணாமற்போன சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

மொனராகலை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் ருவண் குணசேகர மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்