மூதூரில் 5 ஏக்கர் காணி விடுவிப்பு: அடையாளம் காணமுடியா நிலையில் வீடுகள்

மூதூரில் 5 ஏக்கர் காணி விடுவிப்பு: அடையாளம் காணமுடியா நிலையில் வீடுகள்

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2016 | 9:59 pm

திருகோணமலை – மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த, 5 ஏக்கர் காணி நேற்று (08) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை அடுத்து மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் வசித்து வந்த 35 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 1985 ஆம் ஆண்டு சொந்த இடத்தினை விட்டு வெளியேறி வேறிடங்களில் தஞ்சம்புகுந்தன.

இந்த பகுதியிலுள்ள சுமார் 5 ஏக்கர் காணியில் 5 ஆவது ஆட்லறி படைப்பிரிவின் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

பாலத்தடிச்சேனை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் காரணமாக இந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்பட்டது.

இராணுவ முகாம் அகற்றப்பட்ட நேற்றைய தினம் மக்களிடம் காணிகள் கையளிக்கப்பட்டன.

மூன்று தசாப்தத்திற்கு பின்னர் மக்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்குச் சென்றனர்.

எதிர்பார்ப்புக்களுடன் சொந்த இடங்களுக்குச் சென்றவர்களுக்கு, அவர்களது வீடுகள் அடையாளம் காணமுடியாத அளவில் காட்சியளித்தன.

வீடுகள் உடைக்கப்பட்டு, காணியின் எல்லை அழிக்கப்பட்ட நிலையில் குடியிருப்புக்கள் வெறுமனே காட்சியளித்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்