பாடகியாக மாறிய காஜல் அகர்வால்

பாடகியாக மாறிய காஜல் அகர்வால்

பாடகியாக மாறிய காஜல் அகர்வால்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 12:27 pm

இளம் கதாநாயகிகள் பின்னணி பாடகியாக மாறிவருகின்றனர். ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் ஆகியோர் படங்களில் பாடல்கள் பாடி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இவர்கள் வரிசையில் தற்போது காஜல் அகர்வாலும் இணைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள காஜல் முதல் முறையாக கன்னட படம் ஒன்றில் பாட்டு பாடியிருக்கிறார்.

கன்னட திரையுலகில் மெகா ஸ்டாராக வலம் வரும் புனித் ராஜ்குமாரின் 25 ஆவது படமான ‘சக்ரவியூகா’வில் காஜல் அகர்வால் ஒரு டூயட் பாடல் பாடியிருக்கிறார்.

மும்பையில் இதற்கான பாடல் பதிவு நடந்தது. இந்த பாடலுக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் என்.கே.யோகித் கேட்டுக் கொண்டதால் இந்த பாடலை பாடி கொடுத்திருக்கிறார் காஜல்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்