ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்ட ஜெனீவன், செந்தூரனின் நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்பு

ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்ட ஜெனீவன், செந்தூரனின் நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2016 | 7:11 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சிவராஜா ஜெனீவன், அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி தற்கொலை செய்துகொண்ட செந்தூரனின் 45 ஆவது நினைவு நாள் நிகழ்வில் இன்று கலந்துகொண்டார்.

கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 18 வயதான இராஜேஸ்வரன் செந்தூரன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி தனது உயிரை மாய்த்த, மறைந்த செந்தூரனின் 45 ஆவது நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெனீவன், செந்தூரனின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்