சவுதி – ஈரான் பதற்றம்: பேச்சுவார்த்தை நடத்த ரியாத்தில் கூடவுள்ள வளைகுடா நாடுகள்

சவுதி – ஈரான் பதற்றம்: பேச்சுவார்த்தை நடத்த ரியாத்தில் கூடவுள்ள வளைகுடா நாடுகள்

சவுதி – ஈரான் பதற்றம்: பேச்சுவார்த்தை நடத்த ரியாத்தில் கூடவுள்ள வளைகுடா நாடுகள்

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2016 | 4:23 pm

சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள பதற்றமான சூழல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வளைகுடாக் கூட்டுறவு பேரவையைச் சேர்ந்த 6 நாடுகளும் சவுதி தலைநகர் ரியாத்தில் கூடவுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர் முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்தே, சுன்னி ஆதிக்க நாடான சவுதிக்கும் அதன் பகை நாடான ஷியா ஆதிக்கம் கொண்ட ஈரானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.

ஈரானுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்ட சவுதியின் நடவடிக்கையை வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் இன்னொரு உறுப்பு நாடு மட்டுமே பின்பற்றியுள்ளது.

மற்ற நாடுகளும் இந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் சவுதி அரேபியா வற்புறுத்தும் என எதிர்பார்ப்பதாக பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.

நேற்று (08) வெள்ளியன்று, ஐ.நா. வின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பிய ஈரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜாவட் ஸரிஃப், சவுதி தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் யேமனில் அர்த்தமற்ற போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்