கைதான ஹிருணிக்கா பிரேமச்சந்திர பிணையில் விடுதலை

கைதான ஹிருணிக்கா பிரேமச்சந்திர பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2016 | 6:27 pm

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொழும்பு – ஹவ்லொக் பகுதியிலுள்ள அவரின் வீட்டில் வைத்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டார்.

கொழும்பு மேலதிக நீதவான் எம்.எம்.மிஹார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர இன்று காலை கைது செய்யப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்