குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டது

குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டது

குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டது

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 1:03 pm

குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை பகுதிகளுக்கிடையில் தடம்புரண்டுள்ளது. இன்று (09) காலை 9 மணியளவில் ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலை மீண்டும் தண்டாவாளத்தில் நிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் தடம்புரண்டதை அடுத்து தடைப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன் பிரதான பாதையின் போக்குவரத்து வழமை போன்று இடம்பெறுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்