ஒரு இலட்சத்திற்கும் அதிகமான  இலங்கை அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர் 

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான  இலங்கை அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர் 

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான  இலங்கை அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர் 

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 8:01 am

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் அநேகமானோர் முகாம்களில் தங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானஜோதி குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரையும் கட்டம் கட்டமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை வந்தடைவதற்காக இலவச விமான பயணச்சீட்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படுவதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்வளிப்பு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நாட்டை வந்தடையும் அகதிகளுக்கும் அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,600 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளதாகவும மேலும் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் இந்தியாவில் தங்கியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்