ஒபாமாவின் செல்லப்பிராணியான நாயை கடத்த முயன்றவர் கைது

ஒபாமாவின் செல்லப்பிராணியான நாயை கடத்த முயன்றவர் கைது

ஒபாமாவின் செல்லப்பிராணியான நாயை கடத்த முயன்றவர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 12:48 pm

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என பெயரிடப்பட்டுள்ளது.

அவை ஒபாமா, அவரது மனைவி மிச்செல் மற்றும் மகள்களுடன் மிகவும் பிரியமாக பழகி வந்துள்ளது. அவற்றை மிச்செல் பாசத்துடன் வெளியில் அழைத்து செல்வார்.

இந்த நிலையில் அந்த நாய்க்குட்டிகளில் ஒன்றை கடத்த வாலிபர் ஒருவர் திட்டமிட்டுள்ளார். அதற்காக மிச்செல நாய்க் குட்டிகளை வெளியே அழைத்து வருவதை கண்காணித்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பெலாலிஸார் காருடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்காட் ஸ்டாக்கெர்ட் என தெரியவந்தது.

வடக்கு டகோடா மாகாணத்தை சேர்ந்த இவர் சிறிய ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் நாய்களில் ஒன்றை கடத்த திட்டமிட்டதாக கூறியுள்ளார். எனவே அவரை பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணையின் போது சம்பந்தமில்லாமல் ஏதோதோ தெரிவித்துள்ளார், முன்னாள் ஜனாதிபதி ஜோன் எல்.கென்னடி மற்றும் நடிகை மர்லின் மன்றோவின் மகன் என்று கூறியுள்ளதுடன் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்