எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளை பரிசீலிப்பதற்கு நடவடிக்கை

எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளை பரிசீலிப்பதற்கு நடவடிக்கை

எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளை பரிசீலிப்பதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 7:45 am

எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளை பரிசீலிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக ஆணைக்குழிவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பொலிஸார் ஏதேனும் குற்றமிழைத்திருப்பின், அது தொடர்பில் தமது ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை இதுவரை தமது ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் எம்பிலிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் முழுமையான பரிசோதனைகளை மேற்கொள்வதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை எம்பிலிபிட்டிய பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று (08) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்