எம்பிலிப்பிட்டிய இளைஞர் உயிரிழப்பு: பொலிஸ் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

எம்பிலிப்பிட்டிய இளைஞர் உயிரிழப்பு: பொலிஸ் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

எம்பிலிப்பிட்டிய இளைஞர் உயிரிழப்பு: பொலிஸ் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2016 | 10:13 pm

எம்பிலிப்பிட்டிய நகரில் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் நடைபெற்றுவரும் பொலிஸ் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வைபவம் ஒன்றில் உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த இளைஞரின் இறுதிக்கிரியைகள் நாளை (10) நடைபெறவுள்ளன.

இந்நிலையில், பூதவுடலினை எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும், மரணச்சடங்கு காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காது இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அமைதியின்மையாக செயற்படுவதைத் தவிர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்